2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வேட்பாளர் விண்ணப்பம் கோரல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, தேசிய காங்கிரசின் தேசிய பிரசார செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் தெரிவித்தார்.

பெயர், விலாசம், மாகாணம், மாவட்டம், உள்ளூராட்சி சபை, வட்டாரம், தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புவதற்கான காரணம் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.

விண்ணப்பங்களை, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், தேர்தல் பணி, தேசிய காங்கிரஸ், கிழக்கு வாசல், அக்கரைப்பற்று எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, தேசிய காங்கிரசின் தேசிய பிரசார செயலாளர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .