2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சிக்கிய குடும்பப் பெண்

Freelancer   / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு  ஒன்றில் சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள்  பாவனை தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்கள் யாவும்  நிந்தவூர்    பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X