Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதி, உடங்கா பிரதேசங்களில் வீட்டின் கழிவு குப்பைகளை கொட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டின் கழிவு குப்பைகளை அகற்றி பொதுமக்கள் நடமாட்டமுள்ள பிரதேங்களில் கொட்டி வருவதால், அப்பிரதேங்களில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களாக காணப்படுவதாகவும் பொது மக்கள் சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யதிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று (04) மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது குப்பைகளை கொட்டிய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், குப்பைகளை கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களுக்கெதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நாளை மறுதினம்(06) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago