Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயத் துறையைக் கட்டியெழுப்புதற்கு, அரசாங்கத்தால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசேட வேலைத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனவென, விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற, விவசாய இரசாயனத் தொழில்நுட்ப மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கான பயிற்சிச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தின் பண்ணை முகாமையாளர் எம்.வை.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டுக்கும் விவசாயத் திணைக்களத்துக்கும் பங்கம் ஏற்படாத வகையில், விவசாய இரசாயன விற்பனையாளர்கள் செயற்பட்டு, விற்பனை நிலையங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வைத்திருப்பதோடு, விவசாயிகளிடம் நம்பகத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.
சட்டவிரோதமாகவும் அனுமதிப் பத்திரமில்லாமலும் இயங்கும் இரசாயன விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் இதன்போது எச்சரித்தார்.
நாட்டின் தேசிய உற்பத்திக்குப் பெரும் பங்காற்றி வரும் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாயச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் பெரும் நன்மையடைவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவ முன்வர வேண்டுமென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago