Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச பாடசாலைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம், எதிர்வரும் 31ஆம் திகதி, கொழும்பிலுள்ள கல்வியமைச்சுக்கு முன்னால் இடம்பெறவுள்ளதென, அம்பாறை மாவட்ட தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல். ஜெமீன் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு, அக்கரைப்பற்றில் நேற்று (21) மாலை நடைபெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்குவது தொடர்பான பிரேரணையைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், "2017ஆம் ஆண்டு, கல்வியமைச்சால் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு, நேர்முகத் தெரிவும் உடற்றமைத் தெரிவும் இடம்பெற்று, நியமனத்துக்கான பெயர்ப்பட்டில், கல்வியமைச்சால் இவ்வாண்டு ஜூனில் வெளியிடப்பட்டுள்ளது.
"மாகாண, தேசியப் பாடசாலைகளுக்கு 3,850 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும், தேசிய, மாகாண ரீதியில் தெரிவுசெய்யப்பட்டிருந்தும், இந்த அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.
"நியமனம் வழங்கப்படுமென, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், பல வாக்குறுதிகளை அளித்த போதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை ஏமாற்றமாகவே இருந்துவருகின்றது" என அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, இந்நியமனத்தை, அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிய அவர், இதற்கான திகதியை ஒருவார காலத்துக்குள் அறிவிக்க வேண்டும் எனவும், இல்லாவிடில், நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை ஒன்றிணைத்து, கல்வியமைச்சுக்கு முன்னால் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago