2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

‘விரோதமாகச் செயற்படும் மாணவர்களின் நடவடிக்கையை அங்கிகரிக்க முடியாது’

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 02:39 - 1     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, பைசல் இஸ்மாயில்

பாடசாலைக்கும் ஆசிரிய சமூகத்துக்கும் விரோதமாகச் செயற்படும் மாணவர்களின் நடவடிக்கையை, ஒருபோதும் அங்கிகரிக்க முடியாதென,  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் தெரிவித்தார்.

“அவ்வாறு செயற்படும் ஒரு சில மாணவர்களினது செயற்பாடுகள் பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கும் நற்பெயருக்கும் பாரிய தடையாக அமையும்” எனவும் அவர் தெரிவித்தார். 

 இப்பாடசாலையில் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், அதிபரால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து, பாடசாலை முன்பாக சில மாணவர்கள், இன்று (21) காலை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

மாணவர்களின் இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இப்பாடசாலையில் 180க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி பயின்று வருகின்றனர். சிறந்த திறமையும் நற்பண்பும் கொண்ட ஒழுக்கசீலர்களாக அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைக்கும் சமூகத்துக்கும் நற்பெயருடன் செயற்பட்டு வருகின்றனர்.

“இம்மாணவர்களில் சிலர் நிபந்தனையின் அடிப்படையில் குறைந்த தகைமைகளுடன் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் மட்டுமே பாடசாலைக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கும் அபயகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

“ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்கும், ஏனைய மாணவிகளை கிண்டல் செய்வதற்கும், பாடசாலை வேளையில் ரீசேட், கலர் சேட் அணிவதற்கும் பாடசாலை நிர்வாகம் துணைபோக முடியாது.

“இவ்வாறு மிக மோசமான செயற்பாடுகளில் இருந்த மாணவர் ஒருவரை பாடசாலை நிர்வாகம் விசாரணை செய்து, அவரை எச்சரித்த போதே குறித்த மாணவன், தன்னைத் தாக்கயதாக பொய்யான வதந்தியைப் பரப்பி, ஏனைய சில மாணவர்களையும் அழைத்து, இவ்வாறு செயற்பட்டு வருகின்றார்” என்றார்.

இதேவேளை, “மாணவர்களுக்கு, பாடசாலை பாதுகாப்பு வேண்டும்”, “மாணவர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்காதே”, “தாக்கிய அதிபரை இடமாற்றம் செய்”, “நீதியை நிலை நாட்டு”, “கல்வியை உறுதி செய்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை, மாணவர்கள் ஏந்தியவாறு, பாடசாலை நுளைவாயிலை மறித்து, இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை போராட்டம் நடத்தினர்.


You May Also Like

  Comments - 1

  • fiham nuhaath Wednesday, 21 March 2018 05:49 PM

    அவர் பொய் சொல்கிரார் அவர் ததாக்கியதை நான் பார்தன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X