2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

விநாயகபுரத்தில் திருட்டு; அரச உத்தியோகத்தர் முறைப்பாடு

எஸ்.கார்த்திகேசு   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஜன்னல் உடைத்து, நகைகள் உட்பட அலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிலேயே நேற்றிரவு (12) வீட்டிலிருந்த சுமார் ஜந்து பவுண் நகைகளை திருடப்பட்டுள்ளதுடன், அலைபேசியும் திருடப்பட்டுள்ளதாக, வீட்டின் உரிமையாளர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு வந்த திருக்கோவில் பொலிஸார், சம்பவம் தொடர்பாக வீட்டாரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .