2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தால் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் கற்கை நெறிகளுக்கு 2018ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 39 தொழில்நுட்பவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு முழுநேர, பகுதி நேர தமிழ், சிங்கள் மொழி மூலம் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை நெறியை பயில விரும்பும் இளைஞர், யுவதிகள் விண்ணப்பத்தை, அந்தந்த பிரதேசங்களிலுள்ள உரிய தொழில்நுட்பவியல் கல்லூரியின் அல்லது தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு அல்லது அதிபர்களுக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு, தொழில்நுட்பக் கல்விப்பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.என்.கே. மளலசேகர அறிவித்துள்ளார்.

ஒரு பாடத்துக்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணபதாரர்கள், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

கணினி, ஆங்கிலம், மேசன், தச்சுத்தொழில், தட்டச்சு, மின்னியல், உயர்கணக்கியல் மற்றும் தொழில்நுட்பவியல், வியாபார முகாமத்துவம், வாகனம் திருத்துதல், வீட்டு மின்இணைப்பு போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .