Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
“தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்துள்ளனர். அவற்றுக்கு நான் பதிலளித்தால், பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதற்காக, கூட்டத்தைக் குழப்பும் நோக்கில் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர்.
“தலைமையைத் தூசித்துக்கொண்டு கட்சிக்கு வெளியே நின்று, தலைமை விரட்டுவோம் என்று கோசமிடுகின்றனர். மின்சாரத்தைத் துண்டிக்கின்றனர். இவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துதான், பாலமுனையில் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற தேவையில்லை என்பதற்கு இங்கு திரண்டுவந்துள்ள ஆதரவாளர்களே சான்றுபகர்கின்றனர்.
“வட, கிழக்கை இணைக்கக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்லவேண்டும். ஏனென்றால், புலம்பெயர் மக்கள் தங்களது இருப்புக்காக நாட்டில் பிரச்சினைகள் இருக்கவேண்டும் என்றதொரு சூழலையே எதிர்பார்க்கின்றனர்.
“தெற்கிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகள் போன்று நாங்களும் தமிழர்களின் அபிலாசைகளில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய அவசியமில்லை.
“இதேநேரம், முஸ்லிம்களுக்கான தனி மாகாணக் கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை. புதிய அரசமைப்புத் திருத்தத்தில் எங்களுடைய கோரிக்கையாகக் கரையோர மாவட்டம் சேர்க்கப்பட்ட விடயம் தெரியாமல் அதனையும் விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
“கட்சியை அழிப்பதற்கு என்னதான் முயற்சிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறிடியத்து, முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025