2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

விசர்நோய் தடுப்பூசி ஏற்றல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில், தம்பிலுவில் மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களில் விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று (04) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கமைய, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வழிகாட்டலில், கட்டாக்காலி நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக, தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம். பசால் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொடர்ச்சியாக விசர்நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X