2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

Editorial   / 2018 ஜூலை 29 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.கே.றஹ்மதுல்லா, எம்.சி. அன்சார்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதான வீதி, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நேற்று ( 28) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனரெனவும், மேலும் இருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, உடுநுவர, வஹங்கொக பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் லாபீர் (54 வயது), அவரது மனைவியான கண்டி உடுநுவர அல்மனார் தேசிய பாடசாலையின் ஆசிரியை பாத்திமா ஸியானா (45 வயது) ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, தௌலகலையில் இருந்து ஒலுவில் நோக்கிப் பயணித்த வானுடன், டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், வானில் பயணித்த மேற்படி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்துடன், அவர்களது உறவினரான முஹம்மத் நிஸாம், முஹம்மத் மின்ஹாஜ் எனும் சிறுவன் ஆகியோர், படுகாயங்களுக்குள்ளான நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடா்பான மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .