2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வாகன உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்,  இன்று (30) அக்கரைப்பற்று மைதானத்துக்கருகில், ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வெளிமாவட்ட கனரக வாகன உரிமையாளர்களுக்கு, மண் ஏற்றிச் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதியை நிறுத்துமாறு கோரியே, சுமார் 35 கனரக வாகன உரிமையாளர்களால், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறான கனரக வாகனங்களை, கடன்களைப் பெற்றே தாம் கொள்வனவு செய்துள்ளதாகவும் இதைக் கொண்டு, மண் ஏற்றி, தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாகவும் எனினும், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள எமக்கு மண் ஏற்றுவதற்கு அனுமதி வழங்காமல், ஏனைய வெளிமாவட்டங்களில் இருந்துவரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தொழில் செய்யப்பட்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .