2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

வறுமையை சமாளிக்க கிழங்கு நடல் ஆரம்பம்

Princiya Dixci   / 2022 மே 26 , பி.ப. 05:18 - 0     - 67

எம்.எல்.எஸ்.டீன்

நாட்டில் ஏற்பட்டுவரும் வறுமையை சமாளிக்கும் முகமாக, பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ், உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அக்கரைப்பற்று சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.

தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மரவள்ளி மற்றும் வற்றாளை போன்ற கிழங்குப் பயிர்கள் நடுகை செய்யப்பட்டன. இத் திட்டம் கிராம மட்டத்தில் பொதுமக்களிடையே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X