Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வன்முறைகளற்றதும், அமைதியானதும், சுதந்திரமானதாகவும் நடைபெற வேண்டுமென, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு நல்லிணக்கக் குழு, தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக, அக்கரைப்பற்று நல்லிணக்கக் குழுவின் இணைப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் தெரிவித்தார்.
சமாதானமும் சமூகப்பணியும் (பி.சி.ஏ) நிறுவன வழிகாட்டலின் கீழ், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், கட்சிகளிடமும் மேற்படி தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம், தமிழ், சிங்களம் ஆகிய மூவின மக்களுக்கிடையிலும் சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கில், சமாதானத்துக்கும் சமூகப்பணிக்குமான நிறுவனத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கக் குழுக்கள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, ஆலையடிவேம்பு விபுலானந்தா சிறுவர் இல்லத்தில், நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலீல் தலைமையில் நடைபெற்றது.
அங்கு அக்கரைப்பற்று நல்லிணக்கக் குழுவின் இணைப்பாளர் மேலும் கூறுகையில்,
“மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சுதந்திரமானதும் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கக் கூடியதும், நீதியானதுமான தேர்தல் நடைமுறையிருக்க வேண்டும்.
“இம்முறை மூலம் மட்டுமே, மக்களின் விருப்பத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிர்காலத்தில் உண்மையான பெறுமதி கிடைக்கும்.
“தேர்தல்கள் ஆணைக்குழுவின் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் அவை அனைத்தையும் மீறியே, தேர்தல் வன்முறைகள் இடம்பெறுகின்றன.
“தேர்தல் தவறுகளையும் அவற்றுக்கான தண்டனைகளையும் அறிவூட்டுவதற்காக அக்கரைப்பற்று சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
“வன்முறைக்கலாசாரத்தை இல்லதொழித்து, நீதியும் நியாயமுமான தேர்தல் நடை பெறுதலை உறுதிப்படுத்துவதற்கு எல்லோரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025