2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

றமழான் மாதத்தில் பொருள்கள் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

றமழான் மாதத்தையொட்டி, அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கோப் பிறஸ் பல்பொருள் விற்பனை நிலையத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறன.

றமழான் பொதி வழங்கல் விசேட வேலைத்திட்டத்துக்கு அமைவாக, அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று (05) ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி, அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.பி.ஏ.ஹமீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.சி.ஜலால்டீன், எஸ்.ஜாபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.

பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய குறித்த பொதியானது, பொதுமக்கள் நன்மையடையும் வகையில், பழைய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X