2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

’ரணிலின் பிரதமர் பதவியை காக்கப் போராடுகின்றனர்’

எஸ்.கார்த்திகேசு   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அக்கட்சிக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மறந்து, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதாக, அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.பி.சீலன் தெரிவித்தார்.
அம்பாறை - தம்பிலுவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், நேற்று (05) இடம்பெற்ற ஊடகச் சத்திப்பின் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஒவ்வொருவராக இப்போது மாறிக்கொண்டு வருகிறார்களே தவிர, அரசியல்வாதியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மாறிக்கொண்டு வருகின்றார்களே தவிர, வாக்களித்த தமிழ் மக்களுக்கு, எந்தவோர் உரிமையையும் பெற்றுக்கொடுத்ததாக இல்லை. ஆனால் இது குறித்துக் கேட்டால், தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்று, வீரவசனம் பேசிக்கொண்டு இருக்கின்றார்களெனக் கூறினார்.

இவர்களின் இந்தச் செயற்பாடுகளால், தமிழினம் இன்னும் பின்னடைந்தே சென்றுகொண்டு இருக்கிறதெனக் கூறிய அவர், இந்நிலையில், வாக்களித்த மக்களின் உரிமைகள், அபிவிருத்திகள், தமிழ்ப் பட்டதாரிகளுக்கு அரச தொழில்களை வழங்குமாறு வலியுறுத்தி வீதிக்கு இறங்காத கூட்டமைப்பினர், இன்று, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதிவியைப் பெற்றுக்கொடுப்பதற்காக, ஒவ்வாரு நாளும் போராடுகின்றனரெனக் குற்றஞ்சாட்டினார்.
இவர்களின் இந்தச் செயலானது, நகைப்புக்குறியதென:றும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .