Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மார்ச் 28 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக நகர திட்டமிடல் அமைச்சினால் கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 43 மில்லியன் ரூபா பணம், திரும்பிச் செல்லும் அபயாம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம், பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி;க்கையில், "அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்காக பெருமளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், வேலை ஒப்பந்தாக்காரரின் அசமந்தப் போக்கின் காரணமாக அந்தப்பணம் மீண்டும் அரசாங்கத்துக்கு திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமையே இந்த அவல நிலைக்கு காரணமாகும். குறித்த வேலை ஒப்பந்தக் காராரினால் 10 மில்லியன் ரூபாய்க்கான பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டார்.
சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திணைக்களத் தலைவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago