2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை

Princiya Dixci   / 2022 மார்ச் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான அப்துல் கபூர் பர்ஸானா (வயது - 34) எனும் பெண்ணை, 2022.01.29ஆம் திகதி முதல் காணவில்லை.

காணாமல் போன அன்று அரிசி வாங்கி வருவதற்கென  கடைக்குச் சென்ற அப்பெண், அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ்ஸில் ஏறிச் சென்றதாக அவரை இறுதியாகக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இரண்டு மாதங்களை அண்மித்தும் இன்னமும் அவர் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை அப்துல் கபூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இப்பெண் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணவனை சிறிது நாள்களாக பிரிந்து வாழும் மனநோயாளியான இந்தத் தாயின் பிரிவினால் மூன்று மாத சிசு சிறிய பிள்ளைகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.  தாய்ப்பால் கூட இல்லாமல் தாயினுடைய தாயின் பராமரிப்பில் உள்ள சிசு அழுதவண்ணம் உள்ளதால், இந்த இளம் தாய் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அல்லது இவரை பார்த்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் அறிந்தாலோ அண்மையில் உள்ள பொலிஸ் நிலையம் ஊடாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமாறு, அப்பெண்ணின் தந்தை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X