2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சால் 95 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளிகள் உட்பட மீள்குடியேரிய 95 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சால் வீடுகள் கையளிப்பு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் முன்னாள் போராளிகள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் வசிக்கும் 95 குடும்பங்களுக்கு தலா எட்டு இலட்சம் பெறுமதியான நிரந்தர வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சால் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகள், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ் வீடுகளை மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், பிரதம அதிதியாக கலந்த கொண்டு, வீடுகளை வைபவ ரீதியாக மக்களிடம் திறந்து கையளித்திருந்தார்.

இவ் வீடுகள் அனைத்தும் மீள் குடியேற்ற அமைச்சால் ஒருவொரு பயனாளிகளுக்கும் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான நிதிகள் ஒதுக்கப்பட்டு பயனாளிகளின் சொந்த காணிகளில் நிர்மாணித்தக் கொடுக்கப்பட்டள்ளது. இவ் வீடுகள் வரவேற்பு மண்டபம், சமயலறை மற்றும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்டதாக  உறுதியான நிரந்தர வீடுகளாக நிர்மாணித்தக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 33 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெருமதியாக வாழ்வாதார உதவிகளும் அன்றைய தினம் அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதான், திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், கணக்காளர் எம்.அரசரெத்தினம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .