Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 19 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத மீன் விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதிகள் நாற்சந்திகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோதமான மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதுடன் பல்வேறு விபத்து சம்பவங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தன.
இதனை அடுத்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நிந்தவூர் பிரதேச சபை நிந்தவூர் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஒன்றினைந்து இவ்வாறான சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கை இடம்பெறும் இடங்களை திங்கட்கிழமை(19) அடையாளப்படுத்தி எச்சரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த துண்டுப்பிரசுரத்தில் ஏலவே நிந்தவூர் பிரதேச சபை சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கூறி பிரேரணைகளை நிறைவேற்றி கட்டுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago