2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மீண்டும் மண்ணெண்ணெய்க்கு மக்கள் காத்திருப்பு

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

( காரைதீவு  நிருபர் சகா)


கல்முனை மாநகரத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக,  நேற்று(4) சனிக்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சூழ்ந்துகொண்டனர்.

நேற்று அதிகாலையில் இருந்தே இந்த மக்கள் வரிசையில் கொள்கலன்களுடன் காத்திருந்தனர்.

மேலும், காலை 8 மணி முதல் மண்ணெண்ணெய் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்பட்டது.

 கல்முனை மாநகரின் மத்தியிலுள்ள ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டதால், கூடியளவிலான மக்கள்  கூட்டம் வரிசையில் நின்றது.

போக்குவரத்து ஒரு சில மணி நேரம் தாமதம் அடைந்தது. போலீசார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தாராளமாக காணப்பட்டாலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X