2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மின்னல் தாக்கி வீடு சேதம்

Freelancer   / 2023 மார்ச் 01 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று (28) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதன்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அக்கரைப்பற்று ஆறாம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் உள்ள சில வீடுகளில் பலத்த தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னை மரமொன்றை தாக்கிய மின்னல் காரணமாக தென்னை மரத்தில் தீப்பிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து மரத்தின் கீழிருந்த வீட்டையும் இம்மின்னல் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் மூலம் தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக குடும்பத் தலைவர் தெரிவித்தார். 

இச்சந்தர்ப்பத்தில் தாம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கூரையின் பாகங்கள் தான் படுத்துறங்கிய கட்டிலில் பலமாக வீழ்ந்ததாகவும் அதன்மூலம் சிறு காயங்களுடன் தான் உயிர்தப்பியதாகவும் குடும்பஸ்தர் தெரிவித்தார்.

சில மக்கள் குடியிருப்பு மனைகளில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதுடன், மின் வயர்கள் பொருத்தப்பட்டிருந்த வீட்டின் சுவர்ப் பகுதிகள் உடைந்து சிதறியதாகவும் சில தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாகவும்  குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .