Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில், அரசியல் சார்பின்றி, உணர்வுபூர்வமாக விரும்பிய அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு முன்னெடுத்துள்ளதாக, அக்குழுவின் ஏற்பாட்டாளர் நாகமணி கிருஸ்ணபிள்ளை (குட்டிமணி மாஸ்டர்) தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவிலில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் காரியாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைக்காக உயிர்நீத்த 700 மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி மாலை நடத்தவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளனவெனக் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து அனுமதிகள் பெறப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து, குடிநீர், உணவு போன்ற அனைத்து வசதிகளும் மாவீரர் பணிக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
இந்நினைவேந்தல் நிகழ்வில், அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்து எந்தவோர் அரசியல் கட்சிகளும் பங்கு பற்றி, அரசியல் மேடைப் பேச்சின் களமாக மாவீரர் துயிலும் இல்லத்தை மாற்றாது இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
உணர்வுபூர்வமாக வருகைதந்து உயிர்நீத்த மாவீரர்களுக்குத் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago