2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மாணவனின் நற்செயலுக்கு சைக்கிள் பரிசு

எஸ்.கார்த்திகேசு   / 2018 மார்ச் 22 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று, கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவனின் நற்செயலைப் பாராட்டி, பாடாலைக்குச் செல்வதற்கான சைக்கிளொன்றை, பணத்தின் உரிமையாளர் அன்பளிப்பு செய்துள்ளார்.

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 8 இல்  பிரிவில் கல்வி கற்கும் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த க.ஹயானன் என்ற மாணவனே, இவ்வாறு வீதியில் கண்டெடுத்த பணத்தை எடுத்தக் கொண்டு பொலிஸாரை தேடிச் சென்ற போது, வீதியில் கடமையில் இருந்த பொலிஸாரைச் சந்தித்து, அவர்களிடம் பணத்தையும் வங்கிப் புத்தகம் மற்றும் அடையாள அட்டையும் கடந்த வியாழக்கிழமை (15) ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பணமும் ஆவணமும் உரிமையாளர்களிடம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டதுடன், மாணவனை, பொலிஸார் பாராட்டியதோடு, இந்த மாணவனை முன்மாதிரியாக் கொண்டு, ஏனைய மாணவர்கள் செய்யற்பட வேண்டும் எனவும் கோட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, குறிந்த மாணவனின் நற்செயலைப் பாராட்டும் வகையின், பணத்தின் உரிமையாளரான நவரெட்ணம் சுந்தரேஸ்வன், சுமார் 15,500 ரூபாய் பெறுமதியான சைக்கிளொன்றை அன்பளிப்புச் செய்தார்.

இதனை நேற்று (22) பாடசாலையின் காலை ஒன்றுகூடல் வேளையில் மாணவனைப் பாராட்டி திருக்கோவில் வலககல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் வி.குணாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், பாடசாலை அதிபர் வி.ஜயந்தன், மாணவனின் வகுப்பாசிரியர் ஆகியோர் மாணவனை பாராட்டி சைக்கிளைக் கைளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X