2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள் திறந்துவைப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பொதுமக்களின் நலன் கருதி, மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள், பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனால் இன்று (08) காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவு ஆகியனவே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம் பாரீஸ் மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் பி.நித்தியானந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 

அத்துடன், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் , பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், பயிலுநர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பல்நோக்கு அபிவிருத்திச் செயலணி திணைக்களத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு பிரிவு, சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சம் வேலைவாய்ப்பில் இணைக்கும் திட்டத்தில் முதலாம் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பயிலுநர்களை பயிற்றுவித்தல் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல், அவசர கால நிலைமைகளின் போது மீட்புப் பணிகளை முன்னெடுத்தல் என்பனவற்றை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .