2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘மருதமுனை வீடுகளை கையளிக்கவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை, மேட்டுவட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2005ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகளில் 78 வீடுகள் இதுவரை பொதுமக்களுக்கு கையளிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த வீடுகளை, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என அவ்வப்போது அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தெரிவித்த போதிலும், சுமார் 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் இவை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வீடுகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டுமென, பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

பொதுமக்களின் இந்த முறைப்பாட்டுக்கு அமையவும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பணிப்பின் பேரிலும், அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதனைச் சந்தித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் முறையிட்டார்.

இந்த விடயத்தைக் கேட்டறிந்து கொண்ட மேலதிக செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .