2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மனையியல் டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் முதலாம் வருடகால மனையியல் டிப்ளோமா பயிற்சி நெறியினைப் பயில்வதற்கு தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், இன்று (31) தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் 01.01.2019ஆம் திகதியன்று 17 வயதுக்கு குறையாதவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும், தரம் 10 கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரி குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டுமென அவர், மேலும் தெரிவித்தார்.

தகமையுடைய விண்ணப்பதாரிகள், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை எனும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைக்குமாறும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலதிக விவரங்களுக்கு, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம்  0771281478, 0776652925 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .