2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மக்கள் எழுச்சிப் பேரணி

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, நேற்று (27) ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இப்பேரணி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான இப்பேரணி, சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கை தொடர்பான இம்மகஜரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஆதம்பாவா ஷார்க்கியினால், விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் பிரகடன உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இப்பேரணியை முன்னிட்டு சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதிசங்களிலுள்ள ஆறு ஜூம்ஆப் பள்ளிவாசல்களிலும் தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் பொதுமக்கள் அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையுடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .