2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 22 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புகைத்தல் இல்லாத அட்டாளைச்சேனை” எனும் தொனிப்பொருளில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி, எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி. நூருல் ஹக், இன்று (22) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை வர்த்தக சங்கமும் அட்டாளைச்சேனை அபிவிருத்தி பேரவையும் இணைந்து, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புகைத்தலை, மது பாவனையை ஒழிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றவுள்ளதுடன், பிரதேச வர்த்தகர்கள் புகைத்தல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்றும் ஏகமானதாக முடிவெடுத்து, அதனை அமுல்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலிலிருந்து இப்பேரணி ஆரம்பமாகவுள்ளதாகவும், இதில் ​5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

புகைத்தல் மூலமாக ஏற்படுகின்ற கொடிய பிரச்சினைகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புகைத்தல் அற்ற அட்டாளைச்சேனை பிரதேசத்தை உருவாக்கவும், இந்த நல்ல விடயத்தைத் தாம் மேற்கொள்வதாக அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி. நூருல் ஹக் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .