2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

போதை ஒழிப்பு மாநாடு

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை, இஸ்லாமிய பிரசார மையத்தின் அனுசரணையில், பெரியநீலாவணை, அக்பர் ஜூம்ஆபள்ளிவாசல், கல்முனை நீதவான் நீதிமன்ற பிராந்திய சமூதாயம் சார் சீர்திருத்த காரியாலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள போதை ஒழிப்பு மாநாடு, பெரியநீலாவணை அக்பர் கிராம தக்குவா பள்ளிவாசல் முன்பாக நாளை மறுநாள்(11) மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.

“சீரான சமூக உருவாக்கத்துக்கு போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்ற தொனிப்பொருளில், இந்த போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில், கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி, எம்.ஐ.எம்.ஜிபான் மதனி, யூ.எம்.எம்.சஜீத் ஸலபி ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர் என்பதுடன், இதில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .