Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 மார்ச் 02 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ்
சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு, நேற்று (01) மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் அதன் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில், இதற்கான அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கான பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பிரமுகர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், நிர்வாகிகள் தெரிவின்போது ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் உப தலைவராகவும் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.எம்.றபீக் செயலாளராகவும் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் உப செயலாளராகவும் ஓய்வுநிலை அரசசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.மீராலெப்பை பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா மௌலவி உள்ளிட்ட சிலரும் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழுவின் கீழ் சாய்ந்தமருத்திலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகள் தோறும் உப குழுக்கள் அமைக்கப்படும் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் குற்றச்செயல்களை தடுப்பது, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல், சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு, நாடு பூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இக்குழுவில் 10 தொடக்கம் 20 பேர் வரை அங்கம் வகிப்பார்கள். சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற அதேவேளை, குற்றச்செயல்களுடன் சம்மந்தப்படாத பிரமுகர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என சுற்றுநிருபத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
16 minute ago
22 minute ago