2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பொறிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலையில் பொருள்கள்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் சில வர்த்தக நிலையங்களில், அத்தியவசியப் பொருள்களில் பொறிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை சாதகமாக பயன்படுத்தி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு அத்தியவசியப் பொருள்களை விற்பனை செய்வதாகவும் முறையிட்டுள்ளனர்.

பொருள்களை பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X