Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜனவரி 21 , பி.ப. 03:52 - 1 - {{hitsCtrl.values.hits}}
கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை பொத்துவில் கோட்ட பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
இவ்வாசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்துக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதினுக்கம் இடையிலான சந்திபொன்று, பாலமுனையில் தென்கிழக்கு அசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.அன்வர் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போதே, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அதிகாலையிலேயே பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதன் காரணத்தால். காட்டுயானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவங்களும் இடம்பெற்றதுண்டு. இவ்வாறு தமது உயிர்களை பணயம் வைத்து செல்வதுடன். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்களது பாலூட்டும் சிறு குழந்தைகளை கவனிக்க முடியாத நிலைக்கும் உள்ளாகின்றனர்.
“மேலும், பாடசாலைக்கு 7.30 மணிக்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதித்துச் சென்றாலும் கூட அரைநாள் விடுமுறையாக அந்நாள் கணிக்கப்படுகின்றது. குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில் ஜீம்ஆத் தொழுகைக்காக வந்து சேர முடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
“மாணவர்களின் கல்வி நிலையை கவனத்தில் கொண்டும் வெளியூர் ஆசிரியர்களின் மன உளைச்சலையும் தவிர்த்து அவர்களது சேவையை திறம்பட தொடர்ந்து மேற்கொள்வதற்கு மேற்படி கைவிரல் அடையாள இயந்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.
“அவ்வாறு கைவிரல் அடையாள இயந்திரத்தினை இரத்துச் செய்ய முடியாதுவிடத்து பாதிக்கபட்டுள்ள ஆசிரியர்களை 20 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் இடமாற்றம் வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mohideen Monday, 22 January 2018 12:51 AM
Dishes nite were important good sistam for situations fingers frind really good nollache fecher
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025