எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 26 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான வலயக் கல்வி அலுவலகத்தை உருவாக்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போக்கலாகம வாக்குறுதியளித்துள்ளார் என, பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ. அன்வர் சதாத், நேற்று (25) தெரிவித்தார்.
அமைச்சர் றிஸாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர்களுடன், ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில், பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான வலயக் கல்வி அலுவலகம் மற்றும் பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு வாக்குறுதி வழங்கினார் என்றும் அவர் கூறினார்.
பொத்துவில் பிரதேசத்தில், நீண்டகால தேவையாகவுள்ள தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை சதுக்கத்தின் நிர்மானங்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆளுநர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இதன்போது, பொத்துவில் பிரதேசத்துக்கு, தனியான கல்வி வலய அலுவலகத்தை தற்போது உபவலய அலுவலகம் இருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக சாதகமான நிலைப்பாட்டை வழங்கிய ஆளுநர், ஜனாதிபதியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் பல தடவை பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனியான கல்வி வலயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், ஆளுநர் உறுதியளித்தார்.

3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025