2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘பொதுமன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குக’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளைப் பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31ஆவது ஆண்டு நிறைவுநாள், விளையாட்டு சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில், நேற்று (07) மாலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி வேண்டுகோளை அவர் விடுத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் யுத்தக் குற்றம் இழைத்தவர்கள் சுதந்திரமாக உலாவரும் நிலையில், மக்களின் விடுதலைக்காகப் போராடிய அந்த வீரர்கள், சிறைகளில் வாடுகின்றார்கள்.

“அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்கள் அனைவருக்கும் நாம் மதிப்பளிக்கும் அதேவேளை, அவர்களின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டிய கடப்பாடு, நமக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .