2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கம்

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல், கல்முனை பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்றது.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன், சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் ஒருங்கிணைப்பில்  38 கிராம சேவகர்பிரிவுகளை சேர்ந்த கிராம   உத்தியோகத்தர்களும் பொலிஸாரும் இணைந்து பங்குபற்றினர்.

இதன்போது, கல்முனை  பிரதேசத்துக்கான  பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை எவ்வாறு அமைப்பது, அதன் நோக்கம், இந்தக் குழுக்களில் எத்தனை பேர் உள்வாங்க வேண்டும், பெண்களின் பங்களிப்பு  உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் இக்குழுக்களின் ஊடாக பிரதேசத்தில்  குற்றச்செயல்களை தடுப்பது, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல், சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு  நாடு பூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X