2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்தியமுகாம் மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தொடர்சியாக மழை பெய்து வருவதால் நெல் அறுவடை செய்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு போன்ற தாழ்நில வயல் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 93,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இம்முறை 423,000 மெற்றிக் தொன் விளைச்சலை எதிர்பார்க்கப்படுவதாகவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார். 

இதேவேளை, நெற்பயிர் செய்கையில் ஏற்பட்ட கபிலநிறத்தத்தி, வெள்ளநீர் பெருக்கெடுத்தமை மற்றும் கொரோனா அச்ச நிலைமை போன்ற காரணங்களால் இம்முறை நெற்பயிர் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .