2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பெரிய வெங்காய விதைகள் மானியமாக வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தில் பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, பெரிய வெங்காய நாற்று வழங்கல் நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (09) நடைபெற்றது.

 ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகேயின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ்வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே கலந்துகொண்டு, பெரிய வெங்காய நாற்றுக்களை வழங்கி வைத்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் தற்போது பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 3 மாதங்களில் சுமார் 2இலட்சம் இத்திட்டத்தால் உழைக்க முடியும் எனவும் அமைச்சர் இங்கு கூறினார்.

போதிய நீர் வசதி இன்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை செய்கைக்கு சமமான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே, இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொள்ள கூடிய 500க்கும் மேற்பட்ட அனுபவம் உள்ள விவசாய உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும் மானியம் அடிப்படையில் பெரிய வெங்காய நாற்றுக்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .