Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முஸ்லிம் பெண்கள், இஸ்லாமிய வரையறைக்குள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போதுதான் அறிவுடைய ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர் காலத்தில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதுடன், பெண்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்க வேண்டியதொரு நிர்ப்பந்தமும், தேவையும் ஏற்படப் போகின்றதென்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச மகளிர்களுக்கான கூட்டத்தில் இன்று (06) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கல்வித்துறையில் மாத்திரமின்றி ஏனைய அனைத்து துறைகளிலும் ஆண்களைவிட சிறந்த நிலைக்கு இன்று முன்னேற்றம் கண்டு வருவதை எவரும் மறுதலித்துக் கூற முடியாது.
“பெண்கள் வைத்தியராகவும், வக்கீலாகவும், ஏனைய உயர் பதிவிகளிலும் வருவதற்கு நாம் அனைவரும் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டிவரும் இக்காலத்தில், ஏன் அரசியலில் வருவதற்கு முடியாது என்பதனைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
“இலங்கையில் பெண்களின் அரசியில் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதனை எவரும் தட்டிக்கழிக்கவோ அல்லது அதில் கவனயீனமாக இருந்து விடவோ முடியாது.
“இதற்காகவே, ஆளுமை நிறைந்த, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
“தற்காலத்தில் பெண்களின் அரசியல் பிரவேசம் கேலிக்கையாகவும், வெறும் கண்துடைப்பாகவும் நோக்கப்பட்டு வரும் நிலையில், சில அரசியல் கட்சிகளால் முக்கியத்துவம் வழங்கப்படாமல், எந்தவித தகைமையுமற்ற சிலரை களமிறக்கியுள்ளன. ஆனால், அகில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியொன்றை உருவாக்கி, இன்று நாடு முழுவதும் அதற்கான முக்கியத்துவத்தைச் செயற்படுத்தி வருகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025