2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

புதிய நிர்வாகம் தெரிவு

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் 2022 நடப்பு ஆண்டுக்கான கலாசார அதிகார சபையின் புதிய நிர்வாக தெரிவு, கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில், அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், பிரதம அதீதியாக கலந்துகொண்டு, நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்தார்.

அதனடிப்படையில், பதவி வழி தலைவராக ஐ.எல். றிஸ்வான், செயலாளராக அரச சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பி.நூறுல்லாஹ், பொருளாளராக ஊடகவியலாளர் ஏ.ஜி.ஏ. கபூர், பிரதித் தலைவராக எம்.ஏ.நஜிமுடின், உப செயலாளராக எழுகவி ஜெலீல் மற்றும் 06 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தம் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X