2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

புகைப்படப் பிரதி இயந்திரம் அன்பளிப்பு

Editorial   / 2022 மார்ச் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பாடவிதான அபிவிருத்தி மற்றும் பரீட்சைப் பிரிவுக்காக பெறுமதி மிக்க புகைப்பட பிரதி செய்யும் இயந்திரம் கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக தொழிலதிபர் ஒருவரால்  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அதிபர் ஏ.பி. முஜீன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, பிரபல தொழிலதிபரும், ஏ.எஸ்.ஆர்.எம் உரிமையாளருமான எம்.எம். முஸாதிக் புகைப்பட பிரதி செய்யும் இயந்திரத்தைக் கையளித்தார்.

இதன்போது பிரதி அதிபர்களான எம்.இக்பால், எஸ்.எம்.எம். ஜாபீர், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் பொறியியலாளர் என்.ரி.எம். சிறாஜுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X