2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

புகைத்தல் அற்ற ஒலுவில்…

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி, “புகைத்தல் அற்ற ஒலுவில்” எனும் தொனிப்பொருளில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி, ஒலுவிலில் இன்று (01) நடைபெற்றது.

ஒலுவில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசலிலிருந்து இப்பேரணி ஆரம்பமானது.

ஒலுவில் பிரதேச வர்த்தகர்கள் புகைத்தல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டு, அதனை அமுல்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

புகைத்தல் மூலமாக ஏற்படுகின்ற கொடிய உடல்ரீதியான பிரச்சினைகள், மரணம், பொருளாதார பிரச்சினை போன்றவை சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது.

எனவே, இப்படியான கொடிய பிரச்சினைகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புகைத்தல் அற்ற ஒலுவில் பிரதேசத்தை உருவாக்கவும், இந்த நல்ல விடயத்தை தாம் மேற்கொள்வதாக ஒலுவில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.எல். இமாமுதீன் தெரிவித்தார்.

இவ் ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, மாணவர்கள், விசேட அதிரடிப்படையினர், அட்டாளைச்சேனை பாலிஸார், சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல். அலாவுதீன்,  உலமாக்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .