2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

புகை விசுறும் நடவடிக்கை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு புகை விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர், இன்று (15) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரு வார காலத்துக்குள் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, அப் பிரதேசங்களில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனைக்கமைய, அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக ஒருங்கிணைந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் மதஸ்தளங்கள் உட்பட டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் புகை விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கிணறுகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் உருவாகாமல் தடுப்பதற்கு மருந்துகள் இடப்பட்டு வருவதாகவும், குடிநீர் கிணறுகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் பொருட்டு மீன் குஞ்சிகள் இடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் பராமரிப்பின்றி இடங்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X