2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

Editorial   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (28) இராஜினாமா செய்துள்ளார்.

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட இராஜானிமா கடிதத்தை, பொத்துவில் பிரதேச சபையின் பதில் செயலாளர் ரீ.விஜயசேகரனிடம் கையளித்தார்.

பொத்துவில் பிரதேச சபையின் ஹிதாயா புரம் வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் பதவியை சுய விருப்பத்தின் பேரில் இராஜினா செய்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X