Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2018 மார்ச் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்களின் எதிர்கால அபிவிருத்தியை கிராமிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், பிரதேச இளைஞர் ஒன்று கூடலும் இளைஞர் பதவிப்பிரமாணமும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நாளை (23) வெள்ளிக் கிழமை மாலை 2.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.ரீ.எம்.ஹாறுான் தெரிவிதார்.
இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் கீழ் அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுாரிக்கா, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.உமர்லெப்பை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சம்மேளனத்துக்கென இளைஞர்கள் மத்தியில் புதிய நிர்வாகத்தினர் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என்பதுடன், நிஸ்கோ அடையாள அட்டைக்கான விண்ணப்பம் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான விண்ணப்பப் படிவங்களும் கலந்துகொள்ளும் இளைஞர் கழகங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 இளைஞர் கழகங்களிலிருந்து பதவி வழி உத்தியோகத்தர்கள் தலா மூன்று பேர் வீதம் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இளைஞர் சேவை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago