Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 27 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படுவதில்லை என அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பிரதியமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் அதிகாரிகள் செயற்படுவதுடன், எடுக்கப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டுமென்ரார்.
சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago