Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினூடாக, பின்தங்கிய மற்றும் தனித்துவிடப்பட்ட கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மங்களகம, உறுகாமம் புதூர், வடிச்சல் ஆகிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
குறித்த திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை, ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நேற்று (15) நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சால், இவ்வேலைத்திட்டத்துக்கென, 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மங்களகம பிரதேசத்தில் கொங்கிறீட் வீதி, பல்தேவைக் கட்டடம் அமைப்பதற்கென 10 மில்லியன் ரூபாயும்; உறுகாமம் புதூர் மற்றும் வடிச்சல் போன்ற பிரதேசங்களில் வீதிகள், பொதுச் சந்தை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு 10 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago