2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாண்டிருப்பு கடற்கரை வீதிக்கு நிதியொதுக்கீடு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்புக் கிராமத்தின் கடற்கரை வீதி அபிவிருத்திக்கு, நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனது அமைச்சின் மூலம் ஒன்பது மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி விடுத்த வேண்டுகோளின் பேரில், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையுடன், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்நிதியொதுக்கீட்டுக்கான பரிந்துரையை மேற்கொண்டிருந்தார்.

இவ்வேலைத் திட்டம், புவனேஸ்வரி விநாயகமூர்த்தி ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அடுத்த ஒரு சில தினங்களில் மாநகர மேயரால், இவ்வீதி அபிவிருத்திப் பணி ஆரம்பித்து வைக்கப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பாண்டிருப்பு பிரதேச அமைப்பாளர் எம்.விநாயகமூர்த்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .