2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பல்கலைக்கழகத்தில் நல்லிணக்கம் தொடர்பில் தேசிய பிரகடனம்

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் தேசிய ஒருங்கிணைப்பு எண்ணக்கருவை சாத்தியமாக்குவதற்கான பாரிய முயற்சிக்கு நாம் இன, மத, பிரதேசம் மற்றும் மொழி போன்ற பல்வகைத் தன்மைக்கு மதிப்பளிப்பது செயற்பட வேண்டும்” என, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஐிம் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க வாரத்தையொட்டி, நல்லினக்க சத்தியப்பிரமான நிகழ்வு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (23)  நடைபெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உபவேந்தர்  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அரசாங்கத்தனால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் இதனைப் பிரகடனம் செய்யவேண்டும்.

“இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் சமுதாயங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும். சமுதாய ஒற்றுமைக்காக பல்கலைக்கழங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

“நாம் அனைவரும் ஒரே சகோதரத்துடனும் நாற்றுப்பற்றுள்ளவார்களாகவும் வாழவேண்டும். அப்போதுதான் எமது குறிக்கோளை அடையமுடியும். சுபீட்சமான தேசத்துக்காக நாம் பாடுபடவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X