Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜனவரி 25 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பனை மூலப்பொருட்களிலிருந்து பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை, பனை அபிவிருத்தி சபை மேற்கொண்டு வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹூஷைனியா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் படித்து வேலையற்றிருக்கும் யுவதிகள், பனை உற்பத்தி பொருட்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
“பனை ஓலையை மூலப்பொருளாகக் கொண்டு அழகிய வர்ணங்களைக் கொண்ட தட்டுக்கள், பெட்டிகள், பொருட்களைக் கொண்டு செல்லக் மூடிய கூடைகள் மற்றும் அலங்கார வடிவமைப்பு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
“இவர்களுக்கு ஒரு வருட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன், மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவொன்றையும் பனை அபிவிருத்திச் சபை வழங்கி வருகின்றது.
“பயிற்சியின் போது உற்பத்தி செய்யப்படும் தரமான பனை உற்பத்திக் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினையும் பனை அபிவிருத்தி சபை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
“பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட யுவதிகள் தமது தொழிலை மேற்கொள்வதற்காக இலகு கடன் வசதிகளையும், உபகரணங்களையும் சபை வழங்கி வருகின்றது.
“தற்போது கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை நிலவிவருகின்ற காரணத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ள நிலையில் பனை உற்பத்திப் பொருட்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பனை மூலப்பொருளை பெற்றுக் கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது தொழில் முயற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பயிற்சி பெற்று வரும் யுவதிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025